இனிய உறவுகளே!
பிறர்க்கு சொல்லி எதையும் செய்யமாட்டார்.தான் செய்ததை பிறர்க்கு சொல்லவும் மாட்டார்.
அதனால் தான் அவர் கர்மவீரர் காமராசர்.
அப்போது இந்திய அரசியமைப்பு சட்டங்கள் அமலாகிக்கொண்டிருந்த நேரம் பாராளுமன்றத்தில்!
நேருவைப்பார்க்கிறார் காமராசர்!
பிற்படுத்தப்பட்டவர்களை ஏன் இட ஒதுக்கீட்டில் சேர்க்கவேண்டும் என்பதை விளங்கி கூறுகிறார்.
வடநாட்டு மேதாவிகள் பொருளாதார அடிப்படையில் உள்ள ஏழைகளை இதில் இணைக்கவேண்டுமென வாதிடுகிறார்கள்.போராடுகிறார்
வழக்கும் தொடுக்கிறார்கள்.
காமராசர் தந்த அழுத்தத்தால் அன்று பிற்படுத்தபட்டவர்களுக்கே இடதுக்கீடு என சட்டம் வருகிறது.
இதற்கு காமராசரே முழுமுதற் காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை.
பிறகு தமிழக சட்டமன்றத்தில் என்ன நடந்தது?
நம்மை எளிதாக பிற்பட்டோர் பட்டியலில் இணைத்து கொண்டார்களா?
அதற்கு கோவை செழியனார் என்ன செய்தார்?
சூழல் மாறுகிறது. காமராசர் ஆட்சி
இழக்கிறார்.
கோவை செழியனார் குடிமாறுகிறார்.
எதற்காக?
நாளையும் வருவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக