இனிய உறவுகளே!
மாநாடு போடுவது
உறுதியாகிவிட்டது காமராசரை வைத்து.
ஆனால் பணத்திற்கு
எங்கே போவது?
யாரிடமும் கையேந்தி பணம் வாங்காத
இனம் கொங்கு கவுண்டர்கள்!
இவர் மட்டும் விதி விலங்கா என்ன?
இவருடைய தந்தை பழுத்த காங்கிரஸ் காரர்.
பல்லடம் பொன்னுசாமிகவுண்டர் இவர் தந்தையின் தண்பர்.
கோவைசெழியனாரை எப்போதும் புரட்சிவாதி என்றே அழைப்பர்.
அவரிடம் இந்த செய்தியை சொல்லவே இடம் மைக்செட் பந்தல் அமைக்க அவரது இடத்தையே தந்து விட்டார்.
சேனாதிபதி கவுண்டர் பதவியில் இல்லாமல் இருந்தபோதும் நோட்டீஸ் அடித்து தந்து விட்டார்.
பல்லடத்தில் மாநாடு!
எதிர்கட்சிதலைவர் அண்ணாவும் அன்றைய முதலமைச்சர் காமராசரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
ஆனால் சிறப்புரை ஆற்றியது என்னமோ அண்ணா மட்டுமே!
பிற்படுத்தப்பட்டோர் நிலைகளை மாநிலம் வாரியாக வரிசைப்படுத்தி பேசி நாம் முதலில் செய்யவேண்டியது
இந்திய அரசு நம்மை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என முடிக்கிறார்.
இறுதியாக காமராசர் சிறப்புரை ஆற்ற
வருகிறார்!
கூட்டம் ஆவலுடன் கைதட்டுகிறது.
சரி!-பார்க்கலாம்- என்று சொல்லி இறங்கி விடுகிறார்.
காமராசர் பார்தாரா?
என்ன நடந்தது?
என்பது நாளை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக