செவ்வாய், 2 ஜூன், 2020

தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே!

சட்டமன்றம் கூடுகிறது.

அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான
பட்டியலை முதல்வர் வாசிக்கிறார்.

அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்று இருக்கின்றனர்.

கவுண்டர்களுக்கு அதில் இடம் இல்லை.

இதைக்கண்டு வெகுண்டெழுந்த செழியனார் வன்னியர் முக்குலத்தோருக்கெல்லாம் இடம் இருக்கிறது. கொங்கனுக்கு ஏன் இடமில்லை?

அவன் என்ன மிட்டா? மிரசா? என
கேள்விகளால் துளைக்கிறார்.

பதில் சொல்ல முடியாத கலைஞர் அமர்ந்துவிட்டார்.

வன்னியர் இனத்தை சேர்ந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி எழுந்து-
இது சட்டசபை!
பொதுகூட்டமல்ல!-என கலைஞருக்கு
வக்காலத்து வாங்குகிறார்.

உன் சாதிக்கு கிடைத்ததால் சந்தோஷப்படுகிறாய்!
ஏன்  என் சாதிக்கு ஏன் இல்லை என்று கேட்டாயா? என வினவுகிறார்.

இத்தனை சூழ்ச்சிக்கும் காரணம்
பண்ருட்டியார்.

இனத்திற்காக எதையும் செய்ய
துணிவார்.

அடுத்து என்ன நடந்தது?

செழியனார் என்ன செய்தார்.

என்பது நாளை..


தி்.பார்க்கிறேன்-20

இனிய உறவுகளே!

சட்டமன்றம் கூடுகிறது.

அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான
பட்டியலை முதல்வர் வாசிக்கிறார்.

அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்று இருக்கின்றனர்.

கவுண்டர்களுக்கு அதில் இடம் இல்லை.

இதைக்கண்டு வெகுண்டெழுந்த செழியனார் வன்னியர் முக்குலத்தோருக்கெல்லாம் இடம் இருக்கிறது. கொங்கனுக்கு ஏன் இடமில்லை?

அவன் என்ன மிட்டா? மிரசா? என
கேள்விகளால் துளைக்கிறார்.

பதில் சொல்ல முடியாத கலைஞர் அமர்ந்துவிட்டார்.

வன்னியர் இனத்தை சேர்ந்த நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி எழுந்து-
இது சட்டசபை!
பொதுகூட்டமல்ல!-என கலைஞருக்கு
வக்காலத்து வாங்குகிறார்.

உன் சாதிக்கு கிடைத்ததால் சந்தோஷப்படுகிறாய்!
ஏன்  என் சாதிக்கு ஏன் இல்லை என்று கேட்டாயா? என வினவுகிறார்.

இத்தனை சூழ்ச்சிக்கும் காரணம்
பண்ருட்டியார்.

இனத்திற்காக எதையும் செய்ய
துணிவார்.

அடுத்து என்ன நடந்தது?

செழியனார் என்ன செய்தார்.

என்பது நாளை...


தி.பார்க்கிறேன்-19

இனிய உறவுகளே!

1971- சட்டசபைக்கு தேர்தல்.
கலைஞர் முதல்வர் ஆகிறார். கோவை செழியனார் காங்கேய சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகிறார்.

சட்டமன்றம் கூடுகிறது.

ஏற்கனவே நிலுவையில் இருந்த தீர்மானம். கொங்கு இன மக்களை பிற்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று.

இணைப்பது சரி! அதற்கான புள்ளிவிபரங்கள் அரசிடம் இல்லை.
அதுவின்றி சட்டமன்றத்தில் பேசமுடியாது.

அப்போது சட்டமன்ற இணைச்செயலாளராக இருந்த திரு.C.K.இராமசாமி அவர்கள் அதற்காக
புள்ளி விபரங்களுக்கு அப்போதுதான் ஏற்பாடு செய்தார்.

உள்ளாட்சித்துறையின் இயக்குநரின் உதவியாளாராக இருந்த திரு.வையாபுரிக்கவுண்டர் அவர்கள்
பெருமுயற்சி மேற்கொண்டு;

கொங்கு வேளாளக்கவுண்டர் மக்கள் தொகை எவ்வளவு?
படித்தவர்கள் எத்தனைபேர்?
பொருளாதார நல்ல நிலையில் உள்ளவர்கள் எத்தனை பேர்?
என்று கணக்கெடுத்து தந்தார்.

அரசு 1920-ல் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. அதுவும் சரியான புள்ளிவிபரங்களாக இல்லை.

இந்த விபரங்களையெல்லாம் சேகரித்து சட்டமன்றத்தில் பேசினார்.

அதற்கு கலைஞர் என்ன சொன்னார்?

இதை நிறுத்த கலைஞர் கையாண்ட
ராஜதந்திரம் என்ன?

அதற்கு தடையாய்
இருந்தவர்கள் யார்?

அதற்குள் 1972- ம் வந்து விட்டது!

என்ன நடந்தது.....

நாளை..


திங்கள், 1 ஜூன், 2020

தி.பார்க்கிறேன்-18

இனிய உறவுகளே!

பரங்கிமலையில் இதயக்கனியை பெற்ற அண்ணா;  இதயக்கனியை தமிழகத்திற்கு தந்துவிட்டு தன்னை மறைத்துக் கொண்டார்.

அரசியலில் எம்.ஜி்.ஆர் அடியெடுத்து வைத்த நேரம்.

தனிமனித வாழ்வில் ஒழுக்கங்களை
நேசித்த மனிதர் அவர்.

அரசியலில் அது இல்லாதபோது வெகுண்டெழுந்தார்.

அவர்கள் பேசும் அரசியலுக்கும் செயல்படும் அரசியலுக்கும் வித்தியாசத்தை உணர்ந்தார்.

தான் எப்போதும் நம்பும் கோவை செழியனாரிடமே இது பற்றி அடிக்கடி விவாதிப்பார்.

இனி கட்சியில் இருக்க சாத்தியமில்லை என்று முடிவெடுத்த நேரம்!

செழியனாரும் எடுக்கும் முடிவு
சரியே என ஒத்துக்கொண்டார்.

அந்த கூட்டத்தில் கோவை செழியனாரும் கலந்து கொள்கிறார்.

ஆனால் கோவை செழியனார் எம்.ஜி.ஆரோடு வரவில்லை.ஏன்?

நேர்மையின் வடிவம் தான்.
செழியனார்.

கொங்கு இனத்தவன் தன்னிடம் தந்ததை தலையே போனாலும் வேறு ஒருவரிடம் ஒப்படைக்க மாட்டான் என்பதற்கு செழியனாரே சாட்சி.

என்ன அது?

நாளை!


தி.பார்க்கிறேன்-17

இனிய உறவுகளே!

சட்டக்கல்லூரி முதல்வர் பழனிசாமி எ.எம்.இராசா செழியனார் ஆகிய மூவரும் முழுமையான வடிவம் கொடுக்க முயற்சி செய்தார்கள்.

அன்றையஅமைச்சர் மன்றாடியார் அவர்களையும் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களையும் தலைவர்களாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.

அவர்களுக்கு அதில் பெரு விருப்பம் இல்லை.

செழியனார்பொருளாளராக இருக்க;
தேவண்ணன், பெருமாள், கருப்பன் ஐஏஎஸ் சென்னியப்பன் இவர்களெல்லாம் செயலாளர்களாகவும் பொருளாரகவும் வந்து சிறப்பாக செயல்பட்டார்..

இப்போது அவர் எண்ணம் சென்னைக்கு வெளியே!

கரூர் ஈரோடு உடுமலை கொங்கு நண்பர்கள் சங்கத்தை தொடங்கி வருடாவருடம்
சென்று அதன் வளர்ச்சியை கவனித்து
வந்தார்.

அந்த காலகட்டத்தில்எம்.ஜி்.ஆரிடம் இருந்து அழைப்பு வந்தது?

எதற்காக?

நாளை..

தி.பார்க்கிறேன்-16

இனிய உறவுகளே!

செழியனார் சென்னை வந்த நேரம்.
தொழில் செய்வதற்காக!

நாடார்களும் செட்டியார்களும் சென்னையை நோக்கி தொழில் செய்ய
வந்துகொண்டு இருந்தனர்.

நம் இனமக்களோ வெகு குறைவாகவே
சென்னைக்கு வந்தனர்.
விவசாயத்தை
விட்டு அவர்களால் வெளியேற முடியவில்லை.

அவர்கள் தங்குவதற்கு விடுதிகளை
இலவசமாகவும் குறைந்த வாடகைக்கும் ஏற்பாடு செய்து தந்து இருந்தனர்.

நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்- "நகரத்தார்சங்கமும்"

நாடார்கள்-
"நாடார் மகா சபையும்"சிறப்பான உதவிகள் செய்தன.

நம் இனமக்களுக்கும் இது மாதிரியான
ஒரு விடுதி இருந்தால் என்ன என்று
யோசித்தார்.

கொங்கு இன உணர்வுள்ள நண்பர்களை தன இல்லத்திற்கு அழைத்து ஆலோசனை செய்தார்.

அந்த சிந்தனையின் வடிவம் தான் இன்று இராயப்பேட்டையில் உருவாகியுள்ள
"கொங்கு நண்பர்கள் சங்கம்!"

கொங்கு நண்பர்கள் சங்கத்தில்

வரலாறு நாளை...

வருவேன்..


தி.பார்க்கிறேன்-15

இனிய உறவுகளே!

1969- கோவையிலிருந்து சென்னை
வந்துவிட்டார் செழியனார்.

தொழில் செய்வதற்காக!

அண்ணாவின் தொடர்பால் இவருக்கு
திரைப்படத்துறையில் ஆர்வம் ஏற்பட்டது.

விநியோஸ்தரராக நுழைந்து தயாரிப்பாளாக உயர்ந்தவர்.

அன்றே
புரட்சி த்தலைவர் இவரை "முதலாளி" என்றே அழைப்பார்.

அந்த கௌரவத்தை இறக்கும் வரை வீட்டுக்கொடுத்ததில்லை!

தொழில் செய்ய வந்தஇடத்திலும் இன
உணர்வு? இயக்கம் ஆரம்பிக்க முயற்சி?

என்ன இது? என்பது
நாளை....


தி.பார்க்கிறேன்-21

இனிய உறவுகளே! சட்டமன்றம் கூடுகிறது. அரசு தேர்வாணையம் பிரிவு-1 க்கான பட்டியலை முதல்வர் வாசிக்கிறார். அனைத்து சாதியினருக்கும் அதில் இடம் பெற்ற...